×

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

சென்னை: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கருத்துப் பிரிவு மோசடி வழக்கில் சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், மத்திய உள்துறை மந்திரி அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே டெல்லி கலால் வரிக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிசோடியா வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள சிபிஐ, அவரை விசாரணைக்கு ஆஜராகக் கோரி இரண்டு முறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சிகளை ஆம் ஆத்மி அரசு உளவு பார்ப்பதாக பாஜக குற்றம் சாட்டிய நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

Tags : Union Home Ministry ,Delhi ,Deputy Chief Minister ,Manish Sisodia , The Union Home Ministry has allowed Delhi Deputy Chief Minister Manish Sisodia to be investigated under the Prevention of Corruption Act
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...