திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் சர்வதேச விமான நிலைய வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-கலெக்டர் உத்தரவு

திருப்பதி : திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் உள்ள சர்வதேச விமான நிலைய வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் வெங்கடரமணா உத்தரவிட்டுள்ளார்.

திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் விமான நிலைய வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வெங்கடரமணா தலைமை தாங்கினார்.

தொடர்ந்து, அவர் பேசியதாவது: திருப்பதி மாவட்டத்தில் உள்ள ரேணிகுண்டா சர்வதேச விமான நிலைய வளர்ச்சி பணிகள் விரைந்து நடக்க வேண்டும். விமான நிலையத்திற்கு தேவையான இடங்களை அரசு விதிகளின்படி கையகப்படுத்த வேண்டும். இதற்காக, காளஹஸ்தி மண்டல வருவாய் அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மின்சார ஐ வோல்டேஜ் டிரான்ஸ்மிஷன் டவர்களை அப்பகுதியில் இருந்து மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து ஆந்திர டிரான்ஸ்கோ மின்சார துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலைய வளர்ச்சி பணிகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில் ரேணிகுண்டா விமான நிலைய கூடுதல் இயக்குநர் சந்திரசேகர், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஹரிகிருஷ்ணா, ஏர்பேடு தாசில்தார் உதய்சந்தோஷ், ரேணிகுண்டா தாசில்தார் சிவபிரசாத் மற்றும் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: