சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கூடாது என காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக் கோரி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மாணவி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரிய மனு நிலுவையில் உள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக் கோரி மாணவியின் தாய் வழக்கு விசாரணையை மார்ச் 8-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
