டெல்லி: எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. டெண்டர் வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த வேலுமணி டெண்டர் வழங்கியதில் ரூ.800 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.