×

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி..!!

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியவை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் 2015-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சிக்கு வந்த பிறகு அக்கட்சி ஒரு குழுவை அமைத்து எதிர்கட்சிகளை வேவுபார்த்ததாக சிபிஐ குற்றச்சாட்டியிருந்தது. சட்ட விரோதமாக செயல்பட்ட அந்த குழுவுக்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தலைமை வகித்ததாகவும் சிபிஐ தெரிவித்திருந்தது.

கருத்துப்பிரிவு மோசடி தொடர்பான இந்த குற்றச்சாட்டு குறித்து மணீஷ் சிசோடியவை விசாரிக்க டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஏற்கனவே ஒப்புதல் வழங்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மணீஷ் சிசோடியவை விசாரிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில் ஒன்றிய அரசு விசாரணைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.  


Tags : Union Home Ministry ,Delhi ,Deputy Chief Minister ,Manish Sisodia , Delhi, Deputy Chief Minister, Corruption, Union, Home Affairs, Permission
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...