மும்பை: ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படத்தில் வரும் பாடலுக்கு கல்லூரி மாணவிகளுடன் பேராசிரியர்கள் சேர்ந்து நடனமாடிய வீடியோ வைரலாகியுள்ளது. கடந்த மாதம் 25ம் தேதி வெளியான பதான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இந்நிலையில் டெல்லி பல்கலை கழகங்களில் மாணவிகள் பதான் திரைப்பட பாடலுக்கு நடனமாடினர்.