×

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய-அமெரிக்கர் விவேக் ராமசாமி போட்டியிட உள்ளார். அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகிறார். இதுபற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, தேர்தல் பிரசாரத்தையும் டிரம்ப் தொடங்கி விட்டார்.

இதனிடையே அதே கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலேவும் அதிபர் பதவிக்கான குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் குதித்துள்ளார். அரசியலில் பயணத்தில் தனது சாதனைகள் குறித்து காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கும் நிக்கி அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவையும் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக செய்திகள் வௌியாகியுள்ளன. 37 வயதான விவேக் ராமசாமி ஒரு தொழிலதிபர். விவேக்கின் தந்தை எலக்ட்ரிக் இன்ஜினியர், தாயார் மனநல மருத்துவர். இவர்கள் இருவரும் கேரள மாநிலம் வடக்கன்சேரியை சேர்ந்தவர்கள் ஆவர்.விவேக் ராமசாமி சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்களை நடத்தி வருகிறார்.அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் பிறந்த விவேக் ராமசாமி, தற்போது குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.


Tags : Vivek Ramasamy ,Republic Party ,US ,President , America, President, Election, Republican Party, Vivek Ramasamy
× RELATED கடந்த 3 ஆண்டுகளில் கல்விக்காக...