சென்னை : சென்னை அயனாவரத்தில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி பெண்டு சூர்யா திருவள்ளூரில் கைது செய்யபட்டார். வரும் வழியில் காவலர்களை கத்தியால் தாக்கிவிட்டு, தப்ப முயன்ற ரவுடி பெண்டு சூர்யாவை முழங்காலில் சுட்டு பிடித்தார் அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் மீனா. துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த ரவுடிக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.