×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையரிடம் தேமுதிக வலியுறுத்தல்

சென்னை: சென்னை, தலைமைச்செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து, தேமுதிக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஜனார்த்தனன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தார்.  பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் பலமுறை தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக புகார் அளித்துள்ளோம். தற்போது ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும்.

முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தனியார் தொலைக்காட்சி நிருபரை தாக்கும் வீடியோ காட்சிகளை கொடுத்துள்ளோம். எங்கள் புகாரை பெற்றுக்கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையர் விதிமீறல்கள் நடைபெற்றால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்துள்ளார்.  எங்களின் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்தகட்டமாக நீதிமன்றத்தை நாட உள்ளோம். இதுதொடர்பாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.




Tags : DMD ,Erode ,East , DMD urges Election Commissioner to stop Erode East by-election
× RELATED அண்ணன் ஜெயிச்சா உங்கள தங்கத்தட்டுல...