புழல் சிறையில் பெண் கைதிகள் திடீர் ரகளை

சென்னை:  சென்னை புழல் பெண்கள் மத்திய சிறையில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒருவாரத்துக்கு முன் சிறைத்துறை துணை அலுவலர் வசந்தி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா வழக்கில் சிறையில் உள்ள கைதிகள் தாரணி, வினோதினி உள்பட 3 பேரிடம் இருந்து செல்போன், சார்ஜர் மற்றும் சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். பிறகு தாரணி, வினோதினி, சத்யா, நாகஜோதி ஆகிய கைதிகளை ஒரே அறையில் அடைத்து வைத்தனர்.  இதன் காரணமாக, அவர்கள் கடும் கோபம் அடைந்தனர். மேலும்,  தனித்தனி அறையில் அடைத்து வைக்கும்படி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

ஆனால், சிறை நிர்வாகம் அதற்கு அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தாரணி, வினோதினி, சத்யா, நாகஜோதி, கலா, ஜான்சி, சண்முக பிரியா, மஞ்சுளா, மகேஸ்வரி மற்றும் காயத்ரி ஆகியோர் சிறைக்குள் கடும் ரகளையில் ஈடுபட்டதுடன் அங்குள்ள டியூப் லைட்டுகளை அடித்து நொறுக்கினர். மேலும் சிறை கம்பிகளை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இது சம்பந்தமாக சிறை அலுவலர் வசந்தி கொடுத்த புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தினர். இதனால், ஆத்திரமடைந்த பெண் கைதிகள் சிறை அலுவலர் வசந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த ரகளையை ெதாடர்ந்து கைதி தாரணியை திருச்சி பெண்கள் சிறைக்கும், வினோதினியை வேலூர் சிறைக்கும், சத்யாவை கடலூர் சிறைக்கும், நாகஜோதியை மதுரை சிறைக்கும் மாற்றி சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் காரணமாக புழல் சிறையில் பெரும் பரபரப்பு நிலவியது.

* தனித்தனியாக அடைக்காததால் ஆத்திரம்

* தனித்தனியாக அடைக்காததால் ஆத்திரம்

* சிறை அலுவலருக்கு கொலை மிரட்டல்

Related Stories: