×

நடிகர் ஷாருக்கானின் பதான் படம்ரூ.1000 கோடி வசூல்

புதுடெல்லி: நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிவரும் பதான் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடி வசூலித்துள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘‘பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்.

மேலும்  நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 25ம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பதான் படம் உலக அளவில் ரூ.1000 கோடியை வசூலித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



Tags : Shah Rukh Khan ,Pathan , Actor Shah Rukh Khan's film Pathan has collected Rs.1000 crores
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...