ஐதராபாத்தில் பயங்கரம் 4 வயது சிறுவனை கடித்து குதறி கொன்ற தெரு நாய்கள்: சிசிடிவி காட்சிகள் வைரல்

திருமலை: ஐதராபாத்தில் 4 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து குதறி கொன்றது. இந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள இந்தல்வாய் மண்டலத்தை சேர்ந்தவர் கங்காதர், வாட்ச்மேன். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக   தனது மனைவி, 6 வயது மகள், பிரதீப் என்ற 4 வயது மகனுடன் ஐதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட்டைக்கு வந்து வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி அந்த பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்ற கங்காதரின் 4 வயது மகனை, சில தெருநாய்கள்  சுற்றி வளைத்து கடித்து குதறின. நாய்கள் கடித்ததில் கதறியபடி சிறுவன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தான். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: