×

சாரண, சாரணியர் பயிற்சி முகாம்

திருத்தணி:பாரத சாரண, சாரணியர் அடிப்படை பயிற்சி முகாம் நடந்தது. திருத்தணியில் உள்ள ஜிஆர்.டி. கல்லூரியில் பாரத சாரண, சாரணியர் அடிப்படை பயிற்சி முகாம்  7 நாட்கள் நடந்தது. இந்த பயிற்சி முகாமின் நிறைவு விழா நேற்றுமுன்தினம் நடந்தது.  ஜிஆர்.டி. கல்வியியல் கல்லூரி முதல்வர் ராதிகா வித்யாசாகர் தலைமை வகித்தார். இந்த பயிற்சி முகாமில் சாரணர் மாநில பயிற்றுனர் கரூர் எஸ்.முத்துசாமி, சாரணியர் பயிற்றுனர் சென்னை கேட்டி பெய்ஸ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும் சாரண, சாரணியர் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் டாக்டர் சாம்சன் இளங்கோவன், மாவட்ட பயிற்சியாளர் கே.சி.வீரய்யா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் எஸ்.முரளி, ஆர்.சுகுணா ஆகியோர் தினமும் பயிற்சி அளித்தனர்.  

இந்த பயிற்சியில் ஜி.ஆர்.டி. கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர். மாநில பயிற்றுனர் கரூர் எஸ்.முத்துசாமி, சாரணியர் பயிற்றுனர் சென்னை கேட்டி பெய்ஸ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும் சாரண, சாரணியர் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் டாக்டர் சாம்சன் இளங்கோவன், மாவட்ட பயிற்சியாளர் கே.சி.வீரய்யா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் எஸ்.முரளி, ஆர்.சுகுணா தேவி ஆகியோரும் பயிற்சியளித்தனர்.  இந்த பயிற்சியில் ஜி.ஆர்.டி. கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.

Tags : Sarana , Sarana, scout training camp
× RELATED பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி