×

திருத்தணியில் காப்பகத்தை ஆய்வு செய்த ஆணையர்

திருத்தணி: திருத்தணி நகரத்தில் வீடு இல்லாதவர்கள் சாலையோர நடைபாதை, சாலைகள், மரத்தடிகள் என பல்வேறு இடங்களில் தங்கியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பேப்பர், பிளாஸ்டிக், இரும்புகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து கடையில் போட்டுவிட்டு ஓட்டலில் சாப்பிடுவர்கள். மேலும் சிலர் வீட்டு திண்ணைகளிலும் தங்குவார்கள். அப்போது பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் அவர்களை அடித்து விரட்டுவார்கள். மேலும் மழை மற்றும் குளிர்காலங்களில் அவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாளாகி வந்தனர். இந்நிலையில் அவர்களுக்காக  நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் வீடற்ற உறுப்பினர்கள் தங்க சுமார் ரூ.70 லட்சம் மத்திப்பில் காப்பகம் கட்டப்பட்டது.

இந்த காப்பகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்க தனித்தனி அறைகள் உள்ளன. அந்த அறைகளில் இரும்பு கட்டில், மெத்தைகள் மற்றும் அவர்களுக்கு மின்விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் இருபாலருக்கும் தனித்தனி கழிப்பிட வசதியும் உள்ளது. இதேபோன்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் ஆரோபிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சமையலறையும் அந்த கட்டிடத்தில் உள்ளது. இங்கு தரைத்தளம் மற்றும் மேல்தளம் உள்ளது. இங்கு திடீரென நேற்று நகராட்சி ஆணையர் ராமஜெயம் பார்வையிட்டார். காப்பகம் சுத்தமாக உள்ளதா? பராமரிப்புகள் நன்றாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.

Tags : Thiruthani , Commissioner who inspected the archives at Thiruthani
× RELATED திருத்தணியில் வருமான வரித்துறை சோதனை!!