×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பணி மேற்பார்வையாளர்கள் இடமாற்றம்: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளர்கள் 23 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் பிடிஓ அலுவலக ஓவர்சீயர் ஆர்.ராஜசேகரன், குன்றத்தூர் பிடிஓ அலுவலக ஓவர்சீயராகவும், கார்த்திகாதேவி ஸ்ரீபெரும்புதூர் பிடிஓ அலுவலகத்திற்கும், வாலாஜாபாத் பிடிஓ அலுவலக ஓவர்சீயர் எம்.ராஜசேகரன் காஞ்சிபுரம் பிடிஓ அலுவலகத்திற்கும், தனபால் குன்றத்தூர் பிடிஓ அலுவலகத்திற்கும், மாரி மற்றும் மூவேந்தன் உத்திரமேரூர் பிடிஓ அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்திரமேரூர் பிடிஓ அலுவலக ஓவர்சீயர்கள் சத்யா மற்றும் பாமாருக்மணி ஆகிய 2 பேரும் வாலாஜாபாத் பிடிஓ அலுவலகத்திற்கும், கோபாலகிருஷ்ணன் ஸ்ரீபெரும்புதூர் பிடிஓ அலுவலகத்திற்கும், வெங்கடேசன் மற்றும் சுகுமார் வாலாஜாபாத் பிடிஓ அலுவலகத்திற்கும், குன்றத்தூர் ஓவர்சீயர் கருணாகரன் உத்திரமேரூர் பிடிஓ அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குன்றத்தூர் பிடிஓ அலுவலக ஓவர்சீயர் ராமராசு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சாலைகள் மற்றும் பாலங்கள் பிரிவு இளநிலை வரைதொழில் அலுவலராகவும், கோபி வாலாஜாபாத் பிடிஓ அலுவலக ஓவர்சீயராகவும், பெரும்புதூர் பிடிஓ அலுவலக ஓவர்சீயர் சீனிவாசன், துரைவேலு ஆகியோர் உத்திரமேரூர் பிடிஓ அலுவலக ஓவர்சீயர்களாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக சாலைகள் மற்றும் பாலங்கள் பிரிவு வரைதொழில் அலுவலர் ரவீந்திரன் குன்றத்தூர் பிடிஓ அலுவலக ஓவர்சீயராகவும், காஞ்சிபுரம் உபகோட்ட வரைதொழில் அலுவலர் ராஜன்பாபு காஞ்சிபுரம் பிடிஓ அலுவலக ஓவர்சீயராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்திரமேரூர் பிடிஓ அலுவலக ஓவர்சீயர் அசோக்குமார் ஸ்ரீபெரும்புதூர் பிடிஓ அலுவலக ஓவர்சீயராகவும், ஸ்ரீபெரும்புதூர் உபகோட்ட இளநிலை வரைதொழில் அலுவலர் போதநாதன் உத்திரமேரூர் பிடிஓ அலுவலக ஓவர்சீயராகவும், ஸ்ரீபெரும்புதூர் பிடிஓ அலுவலக ஓவர்சீயர் லோகநாதன், ஸ்ரீபெரும்புதூர் உபகோட்ட இளநிலை வரைதொழில் அலுவலராகவும், வாலாஜாபாத் பிடிஓ அலுவலக ஓவர்சீயர் கார்த்திகேயன் காஞ்சிபுரம் உபகோட்ட இளநிலை வரைதொழில் அலுவலராகவும், வாலாஜாபாத் பிடிஓ அலுவலக ஓவர்சீயர் மாதங்கீஸ்வரி காஞ்சிபுரம் பிடிஓ அலுவலக ஓவர்சீயராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Office of Rural Development Agency ,Kanchipuram District , Transfer of Work Supervisors of Office of Rural Development Agency in Kanchipuram District: Collector Notification
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்