உத்திரமேரூர்: உத்திரமேரூரில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஒன்று கூடல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில், பவுடா தொண்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் ஜாஸ்மின்தம்பி தலைமை தாங்கினார். இதில், துணை மேலாண்மை இயக்குனர் ஆல்பினாஜாஸ், முதுநிலை பொது மேலாளர் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தார். உதவி பொது மேலாளர் பக்தன்அருள்ராஜ், உத்திரமேரூர் கிளை மேலாளர் தங்கவேல் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உத்திரமேரூர் கிளை மேலாளர் வீரன் கலந்து கொண்டு பேசுகையில், ‘மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு வகையில் தொடர்ந்து கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கடன் உதவிகளை பெறும் மகளிர் சுயஉதவி குழுவினர்கள் முறையாக பணத்தினை வங்கியில் செலுத்தி விட்டு, மீண்டும் கடன் பெற்று வாழ்வில் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்’ என்றார். மேலும், மகளிர் சுயஉதவி குழு பெண்களுக்கிடையே கோல போட்டி, பாட்டு போட்டி, பேச்சு போட்டி, மியூசிகல் சேர் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மகளிர் சுயஉதவி குழுவினர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர்கள் கலந்து கொண்டனர்.
