துபாய் டூட்டி பிரீ டென்னிஸ்: 3வது சுற்றில் பிளிஸ்கோவா

துபாய்: பிரபல டபுள்யு.டி.ஏ தொடரான துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். 2வது சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரியுடன் (27 வயது, 7வது ரேங்க்) நேற்று மோதிய பிளிஸ்கோவா (30 வயது, 18வது ரேங்க்) 6-1, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 9 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 2வது சுற்றில் பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலென்கா (24 வயது, 2வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-0, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் லாரென் டேவிசை வீழ்த்தினார். இப்போட்டி 59 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. எலனா ஓஸ்டபென்கோ (லாத்வியா), அன்ஹெலினா கலினினா (உக்ரைன்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories: