×

மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் 3 நாட்கள் பராமரிப்பு பணி: குடிநீரை சேமிக்க அறிவுறுத்தல்

சென்னை: மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தின் குடிநீர் குழாய்களில் பராமரிப்பு பணிகள் 3 நாட்களுக்கு நடைபெறுவதால், பொதுமக்கள் தேவையான குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும், என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மீஞ்சூரில் உள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 1000 மி.மீ விட்டமுள்ள பிரதான குழாயில் வரும் நாளை (23ம் தேதி) காலை 8 மணி முதல் 25ம் தேதி காலை 8 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக, மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும்.

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Meenjoor , 3 days maintenance work at Meenjoor desalination plant: instruction to conserve drinking water
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்