×

அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது ரஷ்யா: புடின் அறிவிப்பு

மாஸ்கோ: அமெரிக்கா உடனான அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகுவதாக அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்து நாளை மறுதினத்துடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் அறிவிக்கப்படாத பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர், ‘‘உக்ரைன் மக்களுக்கு எதிராக நாங்கள் சண்டையிடவில்லை. உக்ரைன் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் மேற்கத்திய எஜமானர்களின் பணயக்கைதிகளாக உக்ரைன் மக்கள் சிக்கி உள்ளனர். இந்த போரை ஒருபோதும் நாங்கள் கைவிட மாட்டோம். அதே போல, அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து நாங்கள் விலகுகிறோம்’’ என்றார். அணு ஆயுதங்களை குறைப்பதற்காக அமெரிக்காவும், ரஷ்யாவும் கடந்த 2010ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொண்டன. தற்போது இந்த ஒப்பந்தத்திலிருந்து புடின் விலகுவதாக அறிவித்துள்ளதால், மீண்டும் நீண்ட தூர அணு ஆயுத ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்த தொடங்கும். புடினின் இந்த முடிவு பொறுப்பற்றது என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags : Russia ,US ,Putin , Russia pulls out of nuclear deal with US: Putin's announcement
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...