×

சென்னையில் பெண்களின் பாதுகாப்பு கருதி நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் ரூ.60.84 கோடி மதிப்பில் தெருவிளக்கு மின்கம்பங்கள்.!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், பெண்களின் பாதுகாப்பு கருதி நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 60.84 கோடி மதிப்பில் தெருவிளக்கு மின்கம்பங்கள் மற்றும் எல்.இடி மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு கருதி நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்ட மண்டலங்களான 1, 2, 3, 7, 11, 12, 14 மற்றும் 15 ஆகிய வளர்ச்சியடைந்த பகுதிகள், காவல்துறையினரால் கண்டறியப்பட்ட பகுதிகள், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மையப்பகுதிகளில் புதியதாக தெருவிளக்கு மின்கம்பங்கள் அமைத்தல் மற்றும் அதில் எல்.இடி மின் விளக்குகள் அமைத்தல் பணிகளும் பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் உள்ள துருப்பிடித்த மற்றும் பழுதான தெரு விளக்கு மின்கம்பங்கள் மாற்றி அமைத்தல் ஆகியவற்றினை மேற்கொள்ளவும் 2022 - 2023 ஆம் நடப்பு நிதியாண்டில் மொத்தம் ரூபாய் 60.84 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் முதற்கட்டமாக விரிவாக்கப்பட்ட பகுதிகளில் 1104 தெருவிளக்கு மின் கம்பங்கள் அமைக்கும் பணி, வெளிச்சம் குறைவாக கண்டறியப்பட்ட பகுதிகளில் 696 தெருவிளக்கு மின்கம்பங்களும், கூடுதலாக தேவைப்படும் இடங்களில் 5,259 தெருவிளக்கு மின் கம்பங்களும் மற்றும் துருப்பிடித்த தெவிளக்கு மின் கம்பங்களுக்கு பதிலாக 1997 தெருவிளக்கு மின்கம்பங்களும், இரண்டாம் கட்டமாக கூடுதல் விளக்குகளுக்காக 447 தெருவிளக்கு மின் கம்பங்கள் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் பாதைகளில் 395 மின்கம்பங்கள் என மொத்தம் 9,898 தெரு விளக்கு மின்கம்பங்களும், 10,077 எல்.இ.டி மின் விளக்குகளும் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன. இதில் முதற்கட்டப்பணியில் இதுவரை 8,308 தெரு மின் விளக்கு கம்பங்கள் நடப்பட்டு, 6,311 எல்இடி. மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. முதற்கட்டப்பணிகள் யாவும் மார்ச் மாத இறுதிக்குள்ளும், இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் முடித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Chennai , In Chennai, under the Nirbhaya Nidhi scheme for the safety of women, street light poles worth Rs. 60.84 crore.
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...