சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய 753 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் விருது காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் எவ்வித தண்டனையும் பெறாமல் பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்பட்டது. எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடந்த விழாவில் 753 காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
