விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மீட்கப்பட்ட 8 பெண்கள் உள்பட 28 பேர் மனநல காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கீழ்ப்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், 8 பெண்கள் உள்பட 31 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
