புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை பெற இனி ஸ்மார்ட் கார்டு தேவையில்லை:தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்களை பெற இனி ஸ்மார்ட் கார்டு தேவையில்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவில் பொதுப் போக்குவரத்துகளில் ஒன்றான ரயில் போக்குவரத்து சாதாரண மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மின்சார ரயில் சேவையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் போக்குவரத்து சேவையில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவில் ரயில் போக்குவரத்து சேவை மிகவும் குறைவான விலையில் வழங்கி வருவதால் இதில் பெரும்பாலோனோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் அலுவலகம், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்ல நாள்தோறும் லட்சக்கணக்கான நபர்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.

ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் ஸ்மார்ட் கார்டு-ஐ பயன்படுத்தி  ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த வசதிகள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உட்பட பல  முக்கிய ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக நெரிசல் அதிகம் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்களை பெற இனி ஸ்மார்ட் கார்டு தேவையில்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் புறநகர் ரயில் டிக்கெட்களை பெறலாம். UPI செயலியை பதிவிறக்கம் செய்து QR கோடு மூலம் செல்போனில் டிக்கெட் கட்டணத்தை செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்களிலும் 254 மேம்படுத்தப்பட்ட தானியங்கி டிக்கெட் மிஷின்களை ஏப்ரலுக்குள் நிறுவ முடிவு செய்துள்ளது.

Related Stories: