உறுப்பினர்கள் பட்டியலில் உள்ள குறைகளை சரிசெய்த பிறகு கூட்டுறவு சங்க தேர்தல்: கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம்

சென்னை:உறுப்பினர்கள் பட்டியலில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வரை தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது. கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில்  உத்தரவாதம் அளித்துள்ளது. 2018-ல் நடத்தப்பட்ட தேர்தலில் தகுதியில்லாத பல உறுப்பினர்களின் அவசர அவசரமாக சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இறந்த மற்றும் தகுதியில்லாத உறுப்பினர்களை நீக்கி திருத்தம் மேற்கொள்ளக் கோரி சண்முகம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆண்டுதோறும் ஜனவரி முதல் புதிய உறுப்பினர் பட்டியலை தயாரிக்க வேண்டும் எனவும் அரசுக்கு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் 5 ஆண்டுகள் முடிவடைய உள்ள 4600 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த ஏதுவாக 5 ஆண்டுகள் பதவிக்காலம் நிறைவடையும் கூட்டுறவு சங்கங்களின் பட்டியலை 28 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

கடந்த 2018 மார்ச் 12 முதல் ஆக. 11-ம் தேதி வரை 18,468 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. முதல்நிலையில் ஏப்.3-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வரும் 2023 ஏப்.2-ம் தேதி பதவிக்காலம் முடிவடைய உள்ள 4,684 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்த, கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவுறும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த வேண்டிய கூட்டுறவு சங்கங்களின் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். சரகம் வாரியாக இந்த விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, வரும் 28-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: