நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேர், இலங்கை கடற்படையினரால் கைது

நாகை: நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நாகையை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மீனவர்கள் நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் பகுதிகளில் வழக்கம் போல் மீன் பிடித்து கொண்டிருந்தபோது  நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 7 மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து இலங்கையில் உள்ள கான்கேஸம் துறைமுகத்திற்கு கொண்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக மீனவர்கள் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் 7 மீனவர்களை கைது செய்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: