×

ஸ்பின்னுக்கு எதிராக மிக மோசமாக ஆடினர்: ஆஸி. அணி குறித்து ரமீஸ்ராஜா விமர்சனம்

கராச்சி:இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் நேதன் லயன், அஷ்டான் அகர், டாட் மர்பி, குன்னெமன் ஆகிய 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்தது ஆஸ்திரேலிய அணி. இந்தியாவிற்கு எதிராக நல்ல ஸ்பின்னர்களை இறக்கி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற ஆஸ்திரேலிய அணியின் திட்டம் பலிக்கவில்லை. சரியாக செய்யவில்லை. முதல் டெஸ்ட்டில் நாதன் லயன் மற்றும் அறிமுக ஸ்பின்னர் டாட் மர்பி ஆகிய 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

2வது டெஸ்ட்டில் குன்னெமனையும் சேர்த்து 3 ஸ்பின்னர்களுடன் ஆடியது. ஆனால் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் ஒரே செசனில் 9 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதில் 7 விக்கெட்டுகளை ஜடேஜாவிடமே இழந்தது. இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வதிலும் சொதப்பி, இந்திய வீரர்களை ஸ்பின்னை வைத்து கட்டுப்படுத்துவதிலும் சொதப்பி 2 டெஸ்ட்டிலும் தோல்வியை தழுவியது ஆஸ்திரேலிய அணி. முதல் 2 டெஸ்ட்டிலும் ஜெயித்து 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.

இந்திய அணி இந்த தொடரை வெல்வதுடன், இன்னும் ஒரு போட்டியில் ஜெயித்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிடும். ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட்டிலும் படுதோல்வி அடைந்த நிலையில், அதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறுகையில், பிரிஸ்பேன் மற்றும் பெர்த்தில் துணைக்கண்ட அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி பெரும்பாலும் வெற்றி பெறும். ஆஸ்திரேலிய அணி இந்திய டெஸ்ட் தொடருக்கு சரியாக தயாராகவில்லை. இந்தியாவில் இந்திய அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்துவது சாத்தியமே இல்லாத விஷயம். ஸ்பின்னிற்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் மிக மோசமாக பேட்டிங் ஆடினார்கள். ஒரே செசனில் 9 விக்கெட்டுகளை இழந்தனர். ஜடேஜா அபாரமாக பந்துவீசினார்’’ என்றார்.

Tags : Aussies ,Rameez Raja , Worst played against spin: Aussies. Rameez Raja reviews the team
× RELATED ஆஸிக்கு 279 ரன் இலக்கு: 4 விக்கெட் இழந்து திணறல்