×

கடத்தூர் சுற்றுவட்டாரத்தில் வெற்றிலை மறுசுழற்சி பணிகள் மும்முரம்

கடத்தூர் : கடத்தூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், வெற்றிலை மறுசுழற்சி செய்து வளர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம், கடத்தூர் சுற்றியுள்ள தாளநத்தம், வேப்பிலைப்பட்டி, கேத்துரெட்டிப்பட்டி, அய்யம்பட்டி, நொச்சிக்குட்டை, முத்தனூர், கோம்பை, மதுனபுரி, வெள்ளியங்கிரி, அஸ்தகிரியூர், இராமியணஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல ஆண்டுகள் பலன்தரக்கூடிய இந்த வெற்றிலையை தொடர்ந்து, விவசாயிகள் பாதுகாத்து பயிர்செய்து வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு மார்க்கெட்டில் வெற்றிலை மூட்டைக்கு ₹40 ஆயிரத்தை தாண்டி விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெற்றிலை மறுசுழற்சி செய்து வளர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

தாளநத்தம் பகுதியை விவசாயி பாலு கூறுகையில், ‘பாரம்பரிய முறையில் வெற்றிலை சாகுபடியை செய்து வருகிறோம். வெற்றிலை கொடிகள் மறுசுழற்சி செய்ய, சுமார் 3 மாதங்கள் தேவைப்படுகிறது. இதனால் வெற்றிலை உற்பத்தி மிகவும் குறைந்து வருகிறது. மேலும் வெற்றிலை தோட்டத்திற்கு தேவைப்படும் செம்மண் எடுக்க அரசு அனுமதி கொடுத்தால், இதன் மூலம் கூடுதல் வருவாய் எங்களுக்கு கிடைக்கும். மேலும், வெற்றிலை மூட்டைகளுக்கு ஆதார விலையை, அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்,’ என்றார்.


Tags : Betel ,Kaduur , Kaduur: Farmers around Kaduur are actively involved in recycling and growing betel.
× RELATED அரசு பஸ் கண்ணாடி உடைந்தது