ரஷ்யா, சீனாவுடன் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சி: தென் ஆப்ரிக்காவுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம்

தென் ஆப்ரிக்கா: தென் ஆப்ரிக்காவுடன் சேர்ந்து அந்த நாட்டு கடல் பகுதியில் சீனாவும், ரஷ்யாவும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது பல்வேறு நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. தென் சீன கடலில் ஜப்பானுடன் மோதும் சீனாவும், உக்ரைனை தாக்கி வரும் ரஷ்யாவும் தென் ஆப்ரிக்காவுடன் சேர்ந்து தங்களது கடற்படை வீரர்களுக்கான போர் பயிற்சியை தொடங்கியுள்ளன. இந்த போர் பயிற்சியானது 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

தென் ஆப்ரிக்காவின் ரிச்சர்டு பே கடற்பகுதியில் தொடங்கியுள்ள இந்த போர் பயிற்சிக்கு நேட்டோ நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த 6 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.வில் வாக்களித்த தென்னாபிரிக்கா, அதே ரஷ்யாவை அழைத்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கி ஓராண்டு முடிவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இந்த கூட்டு போர் பயிற்சி உலக நாடுகளை கவனிக்க வைத்துள்ளது.

Related Stories: