திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்த மரவப்பட்டியில் நூற்றாண்டு பழமையான புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட 450 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் தங்களின் தீரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.