×

புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை பெற இனி ஸ்மார்ட் கார்டு தேவையில்லை: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை பெற இனி ஸ்மார்ட் கார்டு தேவையில்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் புறநகர் ரயில் டிக்கெட்டுகளை பெறலாம். UPI செயலியை பதிவிறக்கம் செய்து QR கோட் மூலம் செல்போனில் டிக்கெட் கட்டணத்தை செலுத்து வசதி. மேலும், தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்களிலும் 254 மேம்படுத்தப்பட்ட தானியங்கி டிக்கெட் மிஷின்களை ஏப்ரலுக்குள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.   




Tags : Suburban, Train, Travel, Ticket, Smart Card, Southern Railway
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்