×

2050ல் காலநிலை ஆபத்தை எதிர்கொண்டுள்ள 100 மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 36வது இடம்!!

டெல்லி : 2050ம் ஆண்டிற்குள் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பருவநிலையால் ஏற்படும் பேராபத்துகளை எதிர்கொள்ள இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது. கிராஸ் டொமஸ்டிக் கிளைமேட் ரிஸ்க் என்ற தலைப்பில் நீண்டகால முதலீட்டிற்கு ஏற்ற இடங்களை தேர்ந்தெடுப்பதற்கு உதவிடும் வகையில், சர்வதேச அளவில் பருவநிலையில் ஆபத்தை எதிர் நோக்கி உள்ள மாநிலங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தி கிராஸ் டிபென்டன்சி இனிஷியேட்டிவ் அமைப்பால் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டில் இருந்து இந்த அமைப்பு காலநிலையால் உலக நாடுகளில் ஏற்படும் ஆபத்துகளை பகுப்பாய்வு செய்து வருகிறது. மழை, வெள்ளம், காட்டுத் தீ, கடல் மட்டம் உயர்வு உள்ளிட்ட தீவிர வானிலை மற்றும் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. 2600க்கும் மேற்பட்ட பிராந்தியங்களை கொண்ட இந்த பட்டியலில் இந்திய மாநிலங்களும் இடம் பெற்றுள்ளன. 2050ம் ஆண்டு அளவில் காலநிலை ஆபத்தை எதிர்கொள்ள இருக்கும் முதல் 100 மாநிலங்களின் பட்டியலில் பீகார், உத்தரப் பிரதேசம், அசாம், ராஜஸ்தான், தமிழ்நாடு, மராட்டியம், குஜராத், கேரளா போன்ற மாநிலங்கள் முதல் 50 காலநிலை அபாய பகுதிகளில் உள்ளன.

மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் காலநிலை பாதிக்க கூடிய முதல் 100 இடங்களுக்குள் உள்ளன. அதிகபட்சமாக பீகார் 22வது இடத்திலும் தமிழ்நாடு 36வது இடத்திலும் கேரளா, கர்நாடகா முறையே 50,65 ஆகிய இடங்களையும் பிடித்துள்ளன. சீனாவின் 2 பெரிய பொருளாதார மையங்களான ஜியாங்சு மற்றும் ஹான்டாங் ஆகியவை முதல் 2 இடங்களை பிடித்துள்ளன. அமெரிக்காவின் புளோரிடா உள்ளிட்ட 18 மாகாணங்களுக்கு கால நிலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளன.


Tags : Tamil Nadu , Climate, Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...