×

புழலில் பூங்கா அமைக்க பூமி பூஜை

புழல்: புழலில், பூங்கா அமைக்க பூமி பூஜை நேற்று நடைப்பெற்றது. புழல் அடுத்த 31வது வார்டு கதிர்வேடு கண்ணகி தெருவில்  அரசுக்கு சொந்தமான இடம் சுற்று சுவர் அமைக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகளாக  எந்த பணியும் நடக்கவில்லை. கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது சங்கீதாபாபு வாக்கு சேகரிக்க சென்றபோது அப்பகுதி மக்கள் இந்த இடத்தில் பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையேற்று கவுன்சிலராக வெற்றி பெற்றவுடன்  செய்யப்படும் என அறிவித்தார்.  

இந்நிலையில் 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதாபாபு, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்திலும் மேற்கண்ட இடத்தில் பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட்டுத்திடல் அமைக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார். சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் சார்பில், புதிதாக பூங்கா விளையாட்டு திடல் அமைக்க ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. கவுன்சிலர் சங்கீதா பாபு தலைமை வகித்தார். இதில் மாதவரம் மண்டல அலுவலர் முருகன், செயற்பொறியாளர் சுந்தரேசன், உதவி பொறியாளர் ஸ்ரீதர், காங்கிரஸ் கட்சி சர்க்கிள் தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags : earth , Bhoomi Puja to build a park in Puzhal
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்