×

நிதிஆயோக் புதிய சிஇஓ பிவிஆர் சுப்பிரமணியம்

புதுடெல்லி: நிதி ஆயோக் புதிய சிஇஓவாக பிவிஆர் சுப்பிரமணியம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதிஆயோக் சிஇஓவாக பரமேஸ்வரன் ஐயர் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகள் பணி நியமனம் செய்யப்பட்ட அவர் தற்போது உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வாஷிங்டனில் உள்ள உலக வங்கியில் அவர் 3 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார். இதை அடுத்து நிதிஆயோக் அமைப்பின் புதிய சிஇஓவாக ஆந்திராவை சேர்ந்த பிவிஆர் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

1987ம் ஆண்டு சட்டீஸ்கர் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர் கடந்த ஆண்டு செப்.30ம் தேதி பணி ஓய்வு பெற்ற பிறகு இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக அவருக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது நிதி ஆயோக் சிஇஓவாக அவருக்கு நியமனங்களுக்கான கேபினட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பதவியை ஏற்றதில் இருந்து 2 ஆண்டுகள் அவர் நிதிஆயோக் சிஇஓவாக இருப்பார். பிவிஆர் சுப்பிரமணியம் நிதிஆயோக் சிஇஓவாக நியமிக்கப்பட்டதால் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் எம்டிஎன்எல் நிர்வாக இயக்குனராக இருந்த ராஜேஷ்ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : PVR Subramaniam ,NITI Aayog , PVR Subramaniam is the new CEO of NITI Aayog
× RELATED முதியோர்கள் நலனுக்கு வரி...