×

பேஸ்புக், இன்ஸ்டாவிலும் புளூ டிக்கிற்கு கட்டணம்

வாஷிங்டன்: டிவிட்டர் நிறுவனத்தை தொடர்ந்து, மெட்டா நிறுவனமும் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களின் புளூ டிக்கிற்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு டிவிட்டரில் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு வழங்கப்படும் புளூ டிக் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டுவந்தார். இப்போது டிவிட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் கணக்குகளிலும் பணம் செலுத்தி புளூ டிக் பெறும் முறையை அறிமுகம் இருப்பதாக மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க்  ஜூக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

“இந்த வாரம் மெட்டா சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கான புதிய அறிவிப்பை வெளியிடுகிறோம். மெட்டாவின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கணக்குகளில் பணம் செலுத்தி சரிபார்க்கப்பட்ட கணக்குகளாக மாற்றும் வசதி கிடைக்க உள்ளது. இதன் மூலம் எங்கள் சேவையின் நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் அதிகரிக்கும்’’ எனக் கூறியுள்ளார். இதன்படி இணையதளத்தில் பேஸ்புக், இன்ஸ்டாவில் புளூ டிக் பெற மாதம் 11.99 டாலரும் (ரூ.983), ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் மாதம் 14.99 டாலரும் (ரூ.1300) கட்டணம் பெறப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் கட்டமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் கட்டணம் செலுத்தி புளூ டிக் பெறும் வசதி அறிமுகமாகிறது. விரைவில் மற்ற நாடுகளிலும் இந்த வசதி கிடைக்கத் தொடங்கும்.


Tags : Facebook , Pay for Blue Tick on Facebook, Instagram too
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...