ராகுல் வீடியோ வெளியீடு பாஜவின் மாயத்தால் பலனடைந்த அதானி

புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசின் மந்திரத்தால் கோடீஸ்வர தொழிலதிபர் அதானி பலன் அடைந்ததாக குற்றம்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோ பதிவில் ராகுல் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவு மற்றும் நாட்டின் செல்வம் எப்படி எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது பற்றிபேசிய எனது கருத்துகள், உண்மைகள் அனைத்தும் நாடாளுமன்ற பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டன. நான் வணிகங்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் ஒரு தனிநபர் மட்டுமே ஏகபோக உரிமையை அனுபவிப்பதை ஏற்க முடியாது. மாய, மந்திரங்களை நான் எதிர்க்கிறேன்.

பணக்காரர் பட்டியலில் 602ம் இடத்திலிருந்து 2ம் இடத்திற்கு முன்னேறியது, 4 துறைகளில் இருந்து 14 துறைகளில் தடம் பதித்தது, பூஜ்ஜியத்தில் இருந்து 6 விமான நிலையங்களை கைப்பற்றியது போன்ற மாய மந்திரங்களை எதிர்க்கிறேன். விமான நிலையங்களை நிர்வகிக்காத, அந்த தொழிலில் அனுபவமே இல்லாத நிறுவனத்திற்கு 6 விமான நிலைய பராமரிப்பு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு நிறுவனத்திற்கு 2க்கு மேற்பட்ட விமான நிலையங்கள் வழங்கக் கூடாது என்ற விதி இருந்தும் அது மீறப்பட்டுள்ளது. லாபம் தரும் மும்பை விமான நிலையமும் அதானியிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த அனைத்து பிரச்னைகளையும் தான் நான் நாடாளுமன்றத்தில் எழுப்பினேன்.

Related Stories: