மேகாலயாவில் கணவர், மாமியாரை கொன்று துண்டுகளாக வெட்டி வீசிய மருமகள்: 7 மாதத்துக்கு பின் கைது

கவுகாத்தி: அசாமின் கவுகாத்தியை சேர்ந்த அமரேந்திர டே மற்றும் அவரது தாயார் சங்கரி டே. இருவரையும் காணவில்லை என அமரேந்திர டேவின் மனைவி கடந்த செப்டம்பரில் நூன்மதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தாய், மகன் ஒரே நேரத்தில் காணாமல் சென்றதால் புகார் கொடுத்தவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதனால் புகார் கொடுத்த இளம்பெண்ணை போலீசார் தொடர்ந்து கண்காணித்ததோடு விசாரணையும் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கணவர் மற்றும் மாமியாரை வெவ்வேறு வீடுகளில் வைத்து அவர் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களின் உடலை துண்டு, துண்டாக வெட்டி, பாலீத்தின் கவரில் அடைத்து மேகாலயாவிற்கு காரில் கொண்டு சென்று பல்வேறு இடங்களில் அவர் வீசியுள்ளததும் விசாரணையில் அம்பலமானது. தனது கள்ளக்காதலன் மற்றும் நண்பனுடன் சேர்ந்து அமரேந்திர டேவின் மனைவி இந்த கொலைகளை செய்துள்ளார். இதனை தொடர்ந்து இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: