×

தாயகம் திரும்பினார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்!

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும்  ஆஸ்திரேலிய அணி கேப்டன்  பேட் கம்மின்ஸ் திடீரென தாயகம் திரும்பியுள்ளார். இந்தியா வந்துள்ள  ஆஸி. அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதைத் தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த தொடருக்கும் கேப்டனாக கம்மின்ஸ் (29) நியமிக்கபட்டுள்ளார். பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் கோப்பையையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில், கம்மின்ஸ் நேற்று  திடீரென சிட்னி புறப்பட்டுச் சென்றார். இன்னும் 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள்  எஞ்சியுள்ள நிலையில் இந்த திடீர் பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கம்மின்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் தீவிர சிகிச்சையில் இருப்பதால், உடனடியாக அவர் தாயகம் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் 3வது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு அவர் இந்தியா திரும்புவார் என்று கூறப்படுகிறது. இந்தியா - ஆஸி. மோதும் 3வது டெஸ்ட்  மார்ச் 1ல்  இந்தூரில் தொடங்குகிறது.

Tags : Pat Cummins , Captain Cummins returned home
× RELATED ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி: கொல்கத்தா...