அர்ஜென்டினா ஓபன் அல்கரஸ் அசத்தல்

பியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீரர் அல்கரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் இங்கிலாந்தின் கேமரான் நோர்ரியுடன் (27 வயது, 13வது ரேங்க்) மோதிய அல்கரஸ் (19 வயது, 2வது ரேங்க்)  6-3, 7-5 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். காயம் காரணமாக 3 மாதங்களுக்கும் மேலாக ஓய்வெடுத்து வந்த அல்கரஸ், நடப்பு சீசனில் களமிறங்கிய முதல் தொடரிலேயே பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

அவர் வெல்லும் 7வது ஏடிபி பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியால், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜோகோவிச்சை (7,070 புள்ளி) நெருங்கியுள்ளார். அல்கரஸ் (6,480), சிட்சிபாஸ் (5,940), கேஸ்பர் (5,515), ருப்லேவ் (3,860) டாப் 5ல் இடம் பெற்றுள்ளனர். ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் (3,815) 6வது இடத்தில் உள்ளார்.

Related Stories: