×

7ம் வகுப்பு புத்தகத்தில் தமிழ்மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற பகுதியை நீக்கக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை: ஏழாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் காயிதே மில்லத், தமிழ் மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கூறியதாக இடம்பெற்றுள்ள  தகவலை நீக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஏழாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் 52வது பக்கத்தில் கண்ணியமிகு தலைவர் என்ற தலைப்பில் காயிதே மில்லத் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. இந்த பாடத்தில், மொழிக்கொள்கை என்ற துணை தலைப்பில், சுதந்திரத்துக்குப் பின் ஆட்சி மொழியை தேர்வு செய்வதற்கான அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் பழமையான தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று காயிதே மில்லத் பேசியதாக தவறான தகவல் இடம்பெற்றுள்ளது.

அந்த கூட்டத்தில், தமிழ் பழமையான மொழியாக இருந்தாலும், அதிக மக்கள் பேசும் மொழியாக இல்லாததால் அதை நாட்டின் அலுவல் மொழியாக அறிவிக்க வற்புறுத்தவில்லை. இந்துஸ்தானி, தேவநாகரி அல்லது உருது மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்கலாம் என்று அவர் பேசியிருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. வரலாற்று உண்மைகளை அரசியல் காரணங்களுக்காக மாற்றக்கூடாது.  பள்ளி மாணவர்களுக்கு தவறான வரலாற்றை போதிக்க கூடாது.  இந்த தவறுகளை நீக்கி திருத்தக் கோரி பள்ளிக்கல்வித் துறை செயலாளர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழும இயக்குனருக்கு அளித்த மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு,  மனுதாரர் கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags : Case seeking deletion of section declaring Tamil language as official language in 7th class book: Dismissed in ICourt
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்