பைக்கில் சென்ற போது தடுமாறி கீழே விழுந்த சிறப்பு எஸ்ஐ உயிரிழப்பு

சென்னை: திருவல்லிக்கேணி காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (52). சிறப்பு உதவி ஆய்வாரளான இவர், சென்னை மாநகர கிழக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தில் செல்லும் போது, மயக்கமடைந்த நிலையில் தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ராமகிருஷ்ணனை பரிசோதனை செய்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மீட்டு  பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணனுக்கு சங்கர மதி என்ற மனைவியும், 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். அவருடன் பணியாற்றிய காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள்  அவர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: