×

ஏற்றுமதி இறக்குமதி, தளவாடங்கள் கையாளுதல் குறித்து 2 நாள் இணையவழி கருத்தரங்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஏற்றுமதி இறக்குமதி, தளவாடங்கள் கையாளுதல் குறித்த இணையவழி 2 நாள் கருத்தரங்கம் நடக்கிறது. தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, ஏற்றுமதி இறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் குறித்த இணையவழி கருத்தரங்கம் மற்றும் இரண்டு நாட்கள் பயிற்சியை வரும் 23ம் தேதி முதல் 24ம் தேதி தேதி வரை (மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) வழங்க உள்ளது.

இந்த பயிற்சியில், ஏற்றுமதி இறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் முறைகள், பல்வேறு வகையான போக்குவரத்துக்கள், பலதரப்பட்ட போக்குவரத்து மாதிரி அமைப்புகள், சுங்கத்துறை முகவர்களின் பணிகள், சரக்கு அனுப்புபவர்கள், கப்பல் முகவர்கள், விமான சரக்கு முகவர்கள், கப்பல் அல்லாத சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள், சரக்கு வகைகள், கொள்கலன் மயமாக்கல், கப்பல் மற்றும் விமான சரக்கு செயல்பாடுகள், கப்பல் போக்குவரத்து வகைகள், சர்வதேச வர்த்தக விதிமுறைகள் 2020, கப்பல் ஏற்றுமதி ஒப்பந்த சீட்டு, விமான வழி ரசீது மற்றும் முக்கிய சேவைகள் மற்றும் உபகரணங்களை வழங்கும் செயல்முறை உள்ளிட்ட ஏற்றுமதிக்கான பல்வேறு செயல்பாடுகள் குறித்த பயிற்சிகள் நடத்தப்படுகிறது.

ஏற்றுமதி சார்ந்த தொழில் தொடங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர்www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600 032 என்ற முகவரியிலும், 44-22252081, 22252082, 96771 52265, 86681 02600 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

Tags : Tamil Nadu Govt , 2-day e-seminar on Export Import, Logistics Handling: Tamil Nadu Govt
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்