நாகலாந்து ஆளுநராக இல.கணேசன் பொறுப்பேற்பு

கோஹிமா: மணிப்பூர் ஆளுநராக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த பாஜ மூத்த தலைவர் இல.கணேசன் நாகலாந்து புதிய ஆளுநராக கடந்த வாரம் மாற்றப்பட்டார். அவரது பதவி ஏற்பு விழா தலைநகர் கோஹிமாவில் நேற்று நடந்தது. கவுகாத்தி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி சங்குப்சங் செர்டோ புதிய ஆளுநர் இல.கணேசனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் நெய்பூ ரியோ, துணை முதல்வர் ஒய்.பட்டான் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். நாகலாந்து  மாநிலத்தில் வரும் 27ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: