×

பொன்னமராவதியில் ஜல்லிக்கட்டு 250 காளையர்கள் மல்லுக்கட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூரில் பொன் மாசிலிங்க அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக புதுகை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரையில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. இந்த காளைகளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியில் 650 காளைகள், 250 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி, பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்ெவாரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். பல காளைகள் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து களத்தில் நின்று விளையாடியது. காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கட்டில், டிவி, சைக்கிள், மிக்சி, டைனிங் டேபிள், குக்கர், சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டன. மேலும் சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளைக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.


Tags : Jallikattu ,Ponnamaravati , Jallikattu 250 bullocks wrestle in Ponnamaravati
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்