×

அருந்ததியினர் பற்றி சர்ச்சை கருத்து: சீமானை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மக்கள் போராட்டம்.. உருவ பொம்மையை எரித்தனர்..!!

சென்னை: அருந்ததியினர் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 13ம் தேதி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் தூய்மை பணிக்காக ஆந்திராவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் தான் அருந்ததி சமூகத்தினர் என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இதனால் கொந்தளித்துள்ள மக்கள், சீமானை கண்டித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பாளையங்கோட்டை ஒண்டிவீரன் மணி மண்டபம் முன்பாக ஆதி தமிழர் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் சீமானின் உருவ பொம்மையை எரித்து சாலையில் வீசப்பட்டது. இதேபோல் வண்ணாரப்பேட்டையிலும் சீமானின் உருவ பொம்மையை தமிழ் புலிகள் அமைப்பினர் எரிக்க முயன்றனர். இரு இடங்களில் மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் காந்தி சிலை முன்பு சீமானின் உருவச்சிலையை எரிக்க முயன்ற தமிழ் புலிகள் கட்சியினரை தடுத்து நிறுத்திய போலீசார் உருவ பொம்மையை மீட்டு அவர்களை கைது செய்தனர். அப்போது நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் சீமானை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : Arunthathi ,Tamil Nadu ,Seeman , Arundhatiyar, seaman, people struggle
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...