அனுமதியின்றி வீட்டில் கிளி வளர்த்த விவகாரத்தில் நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்

சென்னை: அனுமதியின்றி வீட்டில் கிளி வளர்த்த விவகாரத்தில் நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி கிளிகளை வளர்த்ததாகக் கூறி வனத்துறை அதிகாரிகள் அவற்றை எடுத்து சென்றனர். யூடியூபில் பதிவிட்ட வீடியோவில் கிளிகள் தொடர்பாக தகவல் வெளியானதால் இது குறித்து வனத்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

நடிகர் தனுஷ் நடித்த மாரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார். நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரண்டு கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளத்து வந்த இரு அலெக்சாண்டரியன் பச்சை கிளிகளை கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கிளிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக ரோபோ சங்கரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரண்டு கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு 2.50 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். உரிய அனுமதி பெறாமல் வெளிநாட்டு கிளிகளை வீட்டில் வளர்த்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: