×

ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யினர் அத்துமீறல்: தட்டிக்கேட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்

டெல்லி: டெல்லி ஜேஎன்யூ பலக்லைக்கழகத்தில் பெரியார் படத்தை அவமதித்தும் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியும் ஏபிவிபி அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டதற்கு கண்டனங்கள் வலுத்துள்ளது. ஜேஎன்யூ பலக்லைக்கழக வளாகத்தில் நேற்று மாலை மும்பை ஐஐடி மாணவர் தர்ஷன், சோலங்கியின் தற்கொலைக்கு நீதி கேட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் பேரணி நடத்தினர். அதை தொடர்ந்து அங்குள்ள மாணவர் செயற்பாட்டு மன்ற அறையில் 100 பிளவர்ஸ் என்ற மாணவர் அமைப்பினர் திரைப்படம் ஒன்றை திரையிட முயன்றனர்.

 அப்போது உள்ளே புகுந்த ஏபிவிபி மாணவர்கள் அவர்களை தடுத்ததோடு எந்த படத்தையும் திரையிட கூடாது என்று எச்சரித்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மாணவர் செயர்மன்ற செயல்பாட்டு அறையில் இருந்த பெரியார், காரல் மார்க்ஸ், லெனின் உருவப்படங்களை ஏபிவிபி அமைப்பினர் உடைத்துள்ளனர். அவர்களை தட்டி கேட்ட தமிழ் நாசர் உள்பட 3 தமிழ்நாட்டு  மாணவர்கள் மீது ஏபிவிபி-யினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொது அதை தடுத்த ஏபிவிபி மாணவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே மாணவர் செயற்பாட்டு மன்ற அறையில் சாவர்க்கர் பெயரை எழுதிவைத்த ஏபிவிபி மாணவர்கள் இடதுசாரி அரசியல் பேசக்கூடாது என்றும் எழுதிவைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த வாரம்  மும்பை ஐஐடி-யில் தர்ஷன், சோலங்கி என்ற முதலாம் ஆண்டு பி.டெக் மாணவர் 7 மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். சாதிய பாகுபாட்டால் சோலாங்கி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது மரணத்திற்கு நீதிகேட்டு டெல்லி ஜேஎன்யூ பலக்லைக்கழகத்தில் பேரணி நடைபெற்றது.

இதற்கு போட்டியாக சத்திரபதி சிவாஜியின் படத்தை வைத்து அவரது பிறந்தநாளான ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பினர் ஏபிவிபி கொண்டாடியதே இந்த மோதலுக்கு ஆரம்பப்புள்ளி என்று கூறப்படுகிறது. சிவாஜி படத்தை இடதுசாரி மாணவர்கள் உடைத்ததே பிரச்சனைக்கு காரணம் என்று ஏபிவிபி அமைப்பினர் குற்றம் சாட்டினர். பெரியாரின் படத்தை உடைத்ததோடு அதை தட்டிக்கேட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.


Tags : ABVP ,RSS ,Tamil Nadu , ABVP trespass, murderous attack on students of Tamil Nadu
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பதற்கான...