×

டிவிட்டரை அடுத்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் புளூ டிக்கிற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும்: மெட்டா நிறுவனம் அறிவிப்பு

கலிபோர்னியா: டிவிட்டரை அடுத்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் புளூ டிக்கிற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த சேவை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் அறிமுகமாகிறது. ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அரசியல் தலைவர்கள், திரையுலகினர், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களின் அதிகாரப்பூரவ பக்கங்களை உறுதிப்படுத்துவதற்காக புளூடிக் வழங்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் அதிகாரபூர்வ கணக்கு என்பதை உறுதிப்படுத்தும் புளூ டிக்கிற்காக டிவிட்டர் பயனாளர்களிடம் மாதம்தோறும் கட்டணம் வசூல்செய்யப்பட உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு டிவிட்டர் பயனர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் புளூடிக் கட்டணம் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரசின் ஆவணங்கள் மூலம் உங்கள் கணக்கை சரிபார்க்கவும், நீல நிற பேட்ஜைப் பெறவும் உங்கள் சமூக வலைத்தள கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பை பெறவும், சந்தா சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இந்த புதிய அம்சம் தொடர்பான தங்களின் சேவைகள் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மெட்டா அதிகாரபூர்வ தொடர்பாக சாதாரண இணைய தளத்திற்கு மாதம் ரூ.992-ம், ஆப்பிள் நிறுவனத்தின் தளத்திற்கு மாதம் ரூ.1,240-யும் வசூலிக்கப்பட உள்ளது. இந்த வாரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மட்டும் இந்த சேவை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ள மார்க் ஜுக்கர்பெர்க் விரைவில் பல நாடுகளில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தள பக்கங்களுக்கு அடுத்தடுத்த கட்டணம் அறிமுகப்படுத்தப்படுவது நெட்டிசன்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  


Tags : Twitter ,Facebook ,Instagram ,BlueTick ,Meta Company , twitter, facebook, instagram, blue tick, payment, meta, notification
× RELATED பொய்யில் உலக சாதனை முறியடிப்பு: சமாஜ்வாடி கடும் தாக்கு