×

வருசநாடு பகுதி மூல வைகையாற்றில் வெள்ள தடுப்பணையை சீரமைத்து கூடுதல் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

வருசநாடு : தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. அதனால், தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது.

தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தாலும் மற்றும் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பாலும், தேனி மாவட்டத்தில் உள்ள நதிகள், குளங்களில் நீர்வரத்து அதிகரிக்கும்.

கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகையாற்றின் குறுக்கே 3க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.இவற்றில் வருசநாடு கிராமத்தில் மூல வைகை ஆற்றங்கரையில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்புச்சுவர் இடிந்து விட்டது. இதனால், மூல வைகை ஆற்றங்கரை பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதனால் குடியிருப்பு பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் மாற்று இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த அதிகாரிகள் சேதம் ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்தனர். ஆனால் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, தடுப்புச்சுவர் கட்டும் பணியை துவங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் மயிலாடும்பாறை அருகே மூல வைகை ஆற்றங்கரை ஓரமாக கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவர் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து மயிலாடும்பாறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, அய்யனார் கோயில் உள்ளிட்ட மூல வைகை ஆற்றங்கரை ஓரமாக உள்ள பகுதிகளின் அருகில் தடுப்புச் சுவர்கள் அரசு சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் பல இடங்களில் வெள்ள தடுப்புச்சுவர்கள் பலத்த சேதமடைந்தது ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டது.’’ என்றார்.

Tags : Varusanadu ,Vaigai River , Varusanadu: Western Ghats of Theni district is also a paradise of natural earth. Varusanadu here,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்