×

சென்னை கேனைன் கிளப் சார்பில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி

சென்னை: சென்னை கேனைன் கிளப் சார்பில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் வளர்ப்புநாயை கையாள்பவர் வெற்றி கோப்பையை தட்டி சென்றார். சென்னை அருகே பல்லாவரத்தில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா,மஹாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட வெளிநாட்டு மற்றும் இந்தியன் நாய் இனங்கள் என 275 நாய்கள் பங்கேற்றன.

குறிப்பாக ராட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட், பக், லாப்ரடர் ரெட்ரீவர், கோல்டன் ரெட்ரீவர், வுடுல், ஹஸ்கி மற்றும் இந்திய நாய் இனங்களான கன்னி, கோம்பை, ராஜபாளையம் ஆகியவை போட்டியிட்டன. தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் வளர்ப்பு நாயை கையாண்ட பாலு என்பவர் சிறந்த நாய் கையாள்பவர் பரிசை தட்டிச்சென்றார். தன்னுடன் இணைந்து தனக்கு லார்ட் பரிசு பெற்றுத்தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Chennai Canine Club , Canine Club, Chennai, Dog Show
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்