×

பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் நோய் தாக்குதலால் பருத்தி மகசூல் பாதிப்பு: ஏக்கருக்கு 500 கிலோ பருத்தி கிடைப்பதாக விவசாயிகள் கவலை


தேனி: தேனி மாவட்டமும் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் நோய் தாக்குதலால் பருத்தி மகசூல் குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குள்ளப்புரம், வாடிப்பட்டி, கோவில்புரம், மேல்மங்கலம், காமாக்காப்பட்டி, ஜெயமங்கலம் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டும் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், பிஞ்சுகள் விட்டு காய்கள் பருவமடையும் சூழலில் சேவடைய் நோய் மற்றும் பூச்சி தாக்குதலால் மகசூல் குறைந்துள்ளது. வழக்கமாக ஏக்கருக்கு 1500 கிலோ பருத்தி எடுக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு 500 கிலோ மட்டுமே மகசூல் கிடைத்திருப்பதாக விவசாயிகள்கவலை தெரிவித்தனர். பருத்தி விலையும் கிலோ ரூ.90-லிருந்து ரூ.60 குறைந்ததால் விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றன.  



Tags : Periyakulam , Periyakulam, disease, cotton, vulnerability, farmer, concern
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி